பால் விலை உயர்வு விபரம் !

சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆவின் பால் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி அரசு நிர்ணயித்துள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது, அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement

Close