அரசின் குறைந்த விலை கேஸ் சிலிண்டர்களை விற்றால் இணைப்பு ரத்து செய்யப்படும்!

மானிய விலையில் வீட்டு
உபயோகத்துக்கு நுகர்வோருக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை விற்றா லோ, வர்த்தக நோக்கத்துக்கு
பயன்படுத்தினாலோ இணைப்பு ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
கலெக்டர் சுப்பையன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:
வீட்டு உபயோகத்துக்கு மானிய
விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சிலர் தேனீர்
கடைகள், உணவகங்கள், வெல்டிங் ஒர்க் ஷாப்
போன்றவற்றில் வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலாய்வுத் துறை அலுவலர்கள் இதுதொடர்பாக ஆய்வு
மேற்கொண்டு இவ்வாறு விதிமுறைகளை மீறி விற்கப்படும் சமையல் எரி வாயு உருளைகளை  பறிமு தல் செய்து வருகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதியே
அரசால் மானிய விலையில் எரிவாயு உருளைகள் வீட்டு உபயோகத்துக்காக மட்டுமே
வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மானிய விலை யில் வழங்கப்படும் வீட்டு உபயோக
எரிவாயு உருளை களை சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்க்காக பயன்படுத்துவது
கண்டுபிடிக்கப்பட்டால் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நுகர்வோரின்
இணைப்பு ரத்து உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகள்
சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் என்றார்.
புகார் தெரிவிக்கலாம்…..
எனவே, சட்டவிரோதமாக மானிய விலை
சிலிண்டர்கள் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவது குறித்து தெரிய வந்தால்
பட்டுக்கோட்டை பகுதியில் உள்ளவர்கள் -94450 00293 குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரின் 98432 93324 என்ற  கைபேசி எண்ணிலும்
தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
courtesy: dinakaran

Advertisement

Close