அதிரையில் தொடர் மழையால் தத்தளிக்கும் பிலால் நகர்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்அது வருகின்றது. இதனால் அதிரையில் நல்ல தட்ப வெட்ப நிலை நிலவுவதுடன் நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்த மழை எந்த அளவுக்கு நாம் பயனடைந்தாலும் அதிரை பிலால் நகரில் மழை வெள்ள பாதிப்பு சற்று அதிகம் எனலாம். பிலால் நகரில் உள்ள கிராணி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி தருகிறது.

மேலும் இந்த தெருவில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் இங்குள்ள சில வீடுகளில் சாலைகளில் தேங்கிய மழை வீட்டுக்குள் செல்லும் நிலையும் உள்ளது. மேலும் குடிசை வீடுகள் அதிகம் உள்ள பகுதியான இதில் மழை நீர் வீட்டுக்குள் நுழைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close