அதிரை பேரூராட்சி தலைவருக்கு அதிரை பிறையின் அன்பான வேண்டுகோள் !

1.தற்பொழுது சில நாட்களாக அதிரையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை நேரத்தில் அதிரையில் தெருவுக்கு ஏறக்குறைய 5 குப்பை மேடுகளாவது உள்ளன. இது குறித்து அதிரை பிறையிலும் புகார் செய்திகள் பதிந்திருந்தோம். இதனை ஏற்று ஒரு சில பகுதிகளில் தாங்களும் விரைந்து நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்க்கு  அப்பகுதி மக்கள் சார்பாகவும் அதிரை பிறை சார்பாகவும் முதற்கன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறொம்.

மேலும் எத்தனை முறை இவற்றை சுத்தம் செய்தாலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே குப்பைகள் குவிந்து விடுகின்றன. இதனை தடுக்க அந்தந்த பகுதிகளில் ஒரு சிமெண்ட் குப்பை தொட்டி கட்டப்பட்டு அதில் தான் குப்பைகளை கொட்ட வேண்டும், மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றதொரு ஆணை பிறப்பிக்கலாம். இதனால் அதிரையில் உள்ள குப்பை மேடுகள் குறைந்து சுகாதாரம் சீரடைந்து உங்கள் சின்ன சிங்கப்பூர் கணவு நிறைவேறுவதற்க்கு வாய்ப்புள்ளது.

2.தாங்கள் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாலிதீன் பைகளை தடை செய்து நல்லதொரு ஆணை பிறப்பிதீர்கள். சில மாதங்கள் அது நல்ல முறையில் செயல்பட்டாலும் காலப்போக்கில் அந்த ஆணையையே மக்கள் மறந்து விட்டார்கள். இதற்க்கு தாங்கள் மீண்டும் இந்த ஆணையை அறிவித்து இணையதளங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஆட்டோ விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதனால் அதிரையில் பாலிதீன் பைகளை ஒழிப்பதற்க்கு வாய்ப்புள்ளது.

3.மேலும் தற்போது மழை காலமானதால் அதிரையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிரையில் நோய் பரவும் அபாயம் உள்ளது. 
எனவே அதிரையில் அனைத்து பகுதிகளுக்கு கொசு மருந்து வாகனத்தை அனுப்புமாறும் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பரிசீலனை செய்து அதிரை பேரூராட்சி தலைவர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுநலன் கருதி..
அதிரை பிறை குழு

Advertisement

Close