கேரளாவில் பயங்கரம் ! முஸ்லிம் பெண் எரித்து கொலை !

கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கர படுகொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் சில பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முஸ்லிம் பெண் ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆற்றியுள்ளது .

கண்ணூர் ரயில் நிலையத்தின் முதலாம் எண் நடைமேடையில் கண்ணூர்- ஆலப்புழா விரைவு ரயில் புறப்படுவதற்காக நிறுத்தப்பட்டது.

அந்த ரயிலில் 13 வது பெட்டியில் ஏறினார் கதிஜா.

சிறிது நேரத்தில் அங்கு மறைந்து இருந்த சில பயங்கரவாதிகள் அந்த பெண்ணின் மீது ஆல்கஹால் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இந்த பயங்கர சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

தீக்காயங்களுடன் அடையாளம் தெரியாத அந்தப் பெண்மணியை கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் காலை 8.30 மணியளவில் பிரிந்தது.

கேரளா மாநிலத்தில் இப்படிப்பட்ட  பயங்கரவாத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Close