FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து ! வாலிபர் பலி !(புகைப்படங்கள் இணைப்பு)

அதிரை
அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலா மற்றும்
சுரேந்திரன். நண்பர்களான இருவரும் இன்று இரவு கொள்ளுக்காட்டில் இருந்து
ஏரிப்புரக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சுரேந்திரன் வண்டியை ஓட்ட
பாலா பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில்
அதிவேகமாக இவர்கள் இருவரும் இராஜாமடம் பாலம் அருகே நிலைதடுமாறி கீழே
விழுந்தனர். இதில் சுரேந்திரன் உடல் சிதைந்து மரணம் அடைந்தார். பாலா லேசான
காயங்களுடன்  உயிர் பிழைத்தார். இருவரும் த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் அதிரை
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  9:45 மணியளவில் விபத்து
நடந்திருக்கலாம் எனவும் அதிவேகம் தான் விபத்து ஏற்ப்பட்டு ஒரு உயிர் பரிபோக
காரணம் எனவும் கூறப்படுகிறது.  

தகவல்: OKM. பைசல் (அதிரை பிறை நிருபர்)

Advertisement

Close