அடுத்த வருடம் முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹஜ்ஜுக்கு செல்வதில் சிக்கல்?

கஃபா விஸ்தரிப்பு பணிகள் நிமித்தம்
அனைதது நாடுகளினதும் ஹஜ் கோட்டாக்கள் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில்
ஹஜ்ஜுக்காக வரும் சிறுவர்கள், கைக் குழந்தைகள் நோய்வாய்படுவதும் இவ்வருடம்
அதிகரித்திருப்பதால் அடுத்த வருடம் முதல் 10 வயதுக்குட்பட்ட
சிறுவர்களுக்கான ஹஜ் அனுமதியை நிறுத்துவது தொடர்பில் சவுதி அரசு ஆலோசித்து
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வருடம் பாரிய அளவில்
கைக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதோடு சிறுவர் சுகாதாரப் பிரச்சினைகளும்
மேலோங்கியிருந்ததாக உள்நாட்டு ஊடகங்களும் தகவல் வெளியிட்டிருக்கும்
நிலையில் குறித்த விவகாரம் சூரா சபையின் அனுமதிக்காக
சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close