அதிரை கீழத்தெருவில் மலைபோல் குவியும் குப்பைகள் அள்ளப்படாத அவலம்!

அதிரை கீழத்தெரு ஜாவியால் பின்புரம் உள்ள பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகள் சரியாக அள்ளப்படாத காரணத்தால் மலை போல் குவிந்து கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் குப்பைகள் அங்கும் இங்கும் சிதறியும், துர்நாற்றம் வீசிய வாரும் உள்ளது. மேலும் மழை நேரம் ஆதலால் இங்கு கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கென் குனியாமுத்தூர் போன்ற நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.

எனவெ பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதியில் குவியும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement
Close