மழை வெள்ளத்தில் அதிரை! பரிதவிக்கும் மக்கள்! (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாக அதிரையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அதிரையில் பழுதடைந்த சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள குண்டும் குழியுமான சாலையால் பேருந்து நிலையமே வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் மிதந்து செல்கின்றன.

அது போல் அதிரை ஈ.சி.ஆர் ரோடு சபியா ஸ்டோர் துவங்கி தீன் மெடிக்கல் வரை உள்ள சாலையோரத்தில் 3 மாதங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு மூடப்படாமல் சென்றதால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் கிடக்கிறது. இதனால் இப்பகுதிகள் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

Advertisement

Close