வீணாகும் வக்ஃப் சொத்துக்கள் ! மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தகவல் !

நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்கள் வீணாகிக்கொண்டிருப்பதாகவும், இதனை முறையாக பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் இதுக்குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக்குழு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
முஸ்லிம்களின் நிலைக் குறித்து ஆராய முந்தைய ஐ.மு அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்களை மதிப்பீடுச் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் அமிதாப் தலைமையில் மதிப்பீட்டுக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழு தமது அறிக்கையை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் ஒப்படைத்துள்ளது.
இதுக்குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் பத்திரிகையொன்றுக்கு தெரிவிக்கையில்,’தற்போது சிறுபான்மை துறை அமைச்சகத்திடம் உள்ள ஆவணங்களின்படி மத்திய அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள், 1053 தனியார்களால் 16388 சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இந்த எண்ணிக்கை கடந்த ஒருவருடத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களில் பெரும்பாலானவை மீது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது.இவைகளை விரைந்து முடிப்பதுடன் வக்ஃப் சொத்துக்களை முறையாக பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் என்று மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள் இரண்டு லட்சம் எண்ணிக்கையில் இருந்தபோதும் 160 சொத்துக்கள் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டுள்ளன.இந்த அறிக்கை வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Close