அம்மாவின் விடுதலைக்காக முத்துப்பேட்டை தர்காவில் கூட்டு பிரார்த்தனை செய்த அதிரை அதிரை அ.தி.மு.க வினர்!

இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது.

இதற்க்கு முன்னதாக நேற்று அம்மா அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய சிறப்பு பிரார்த்தனை 16.10.2014 வியாழக்கிழமை முத்துப்பேட்டை தர்காவில் நடைப்பெற்றது. இதில் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் (தமிழ்மகன்) உசேன் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, தஞ்சை தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் மலை அய்யன், தஞ்சை தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துணை தலைவர் அபுபக்கர் அதிரை பேரூர் கழக செயலாளர் பிச்சை, அதிரை பேரூர் கழக துணை செயலாளர் முகமது தமிம், அதிரை பேரூர் எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிரை பேரூர் கழக 14 வது வார்டு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Close