அதிரையில் மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!

அதிரையில் தற்பொழுது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஊரே குளிர்ச்சியாக மாறியுள்ளது. அதிரையர்கள் மனதில் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.

இந்த மழையை பார்த்தால் சிறு பிராயம் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது மழௌ வந்தால் சிறுவர் சிறுமிகள் அனைவரும் ஒன்று கூடி இதை பாடி மகிழ்வார்கள்.

 மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!


முக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க!


எங்க ஊட்டு மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க!


சும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க!

ஆனால் தற்போதைய சூழலில் உள்ள சிறுவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இப்பொழுது உள்ள சிறுவர்களில் பலரும் மழை பெய்தால் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு தெளிவு பெற்று விட்டனர்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் அந்தகால சிறுவயது நினைவுகள் என்று சுகம் தான்.

Advertisement

Close