விறுவிறுப்பான அரை இறுதி ஆட்டத்தில் அதிரை AFFA அணி தோல்வி!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (21-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய தினம் நடைப்பெற்ற அரை இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை எதிர்த்து நமதூர் AFFA அணி களமிறங்கியது. முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் திருச்சி அணி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் துவக்கத்தில் திருச்சி ஒரு கோல் அடிக்க ஆட்டத்தின் விறுவிறுப்பு கூடியது. இறுதி நேரத்தில் AFFA அணி வீரர் தாரிக் அவர்கள் லாவகமாக ஒரு கோலை அடித்து துவண்டு போயிருந்த அதிரை ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினார்.

மீண்டும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து ஆட்ட முடிவை டைபிரேக்கர் முறையில் தீர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டது. டைபிரேக்கரில் திருச்சி அணி 5-4 என்றா கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. கால்பந்தாட்ட போட்டியை பார்க்க வந்தப் ரசிகர்களுக்கு இரு அணி வீரர்களும் விறுவிறுப்பான ஆட்டத்தை வழங்கினர். 

இறுதி போட்டி நாளை மறுதினம் தென்னரசு மெமோரியல் பள்ளத்தூர் அணியை எதிர்த்து இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணி விளையாட உள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close