அதிரையில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற ரஹ்மானியா மதர்ஸாவின் 100வது பட்டமளிப்பு விழா!

அதிராம்பட்டினத்தில் ரஹ்மானியா மதர்ஸாவின் 100வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்றும் இன்றும்  (23,24-05-2015) நடைப்பெற்றது. இரண்டு நாட்கள் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சி தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயிரக்கணக்கான உலமாக்கள், பொதுமக்கள் அதிராம்பட்டினத்துக்கு வருகை தந்தனர். 
விழா பந்தல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. மேலும் விழாவில் நடைப்பெறும் மார்க்க சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்கும் வண்ணமாக பல பகுதிகள் ஒளிபெருக்கிகள் கட்டப்பட்டது. ரஹ்மானியா மதர்சாவின் நூற்றாண்டு விழாவால் அதிரையே கடந்த இரண்டு நாட்களாக களைகட்டி இருந்தது. 
இந்நிகழ்ச்சி இன்றைய தினத்தின் முக்கிய அம்சமான மாணவர்களுக்கு ஸனத் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியோடு நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் நிகழ்ச்சி நடைப்பெறும் வேலை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது எனவே இப்பதிவில் நிகழ்ச்சி நடைப்பெறும் போது உள்ள புகைப்படங்களை பதியவில்லை.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்ட்ப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு உதவும் விதமாக SDPI கட்சியை சேர்ந்த பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close