அதிரை மேலத்தெரு முஹல்லாவாசிகளுக்கு TIYA வின் நன்றி அறிவிப்பு!

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக கடந்த வருடம் முதல் நமது மஹல்லாவாசிகளிடமிருந்து குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கி வருகிறோம், சென்ற ஆண்டு நமது மஹல்லாவாசிகளிடமிருந்து 67 தோல்கள் கிடைத்தது. இதே போல் இந்த ஆண்டும் TIYAவின் சார்பாக நமது மஹல்லாவாசிகளிடமிருந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் மஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துழைப்போடும் நமது மஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினாலும் தாஜுல் இஸ்லாம் சங்கம், மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பெரும் பங்களிப்பினால் அல்லாஹ்வின் உதவியால் இந்த வருடம் 124 தோல்கள் வசூல் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

எல்லா வகையிலும் நமக்கு ஒத்துழைப்பு தந்த நமது மஹல்லாவாசிகளுக்கும், பம்பரம் போல் சுழன்று துடிப்புடன் செயல்பட்ட நமது மஹல்லா இளைஞர்கள் மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம் அனைத்து நிர்வாகிகள், அதிரை TIYA வின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமீரக TIYA வின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் நமது மஹல்லாவின் நலனை வேண்டி இன்னும் பல நல்ல செயல் திட்டங்களை இறைவன் கிருபையால் செய்ய உள்ளோம், உங்களின் மேலான நல்ல கருத்துக்களையும், ஆதரவுகளையும் எங்களுக்கு வழங்கிடவேண்டும் நமது தெருவின் நலனை வேண்டி உங்களின் மேலான ஆலோசனைகளையும் உங்களின் ஆதரவுகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தால் இதுபோன்று பல நல்ல திட்டங்கள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் உலக முழுவதும் வாழும் நமது மஹல்லாவாசிகள் அனைவரும் தங்களின் நல்ல கருத்துக்களை எங்களுக்கு வழங்கிடவும்.

நமது மஹல்லா இன்னும் மேண்மை அடைய எங்களால் இயன்ற அளவு நாங்கள் பாடுபட தயாராக உள்ளோம் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதியை நமது மஹல்லா மக்களிடமிருந்து பெற்று எந்த நோக்கத்திற்காக நிதி பெறப்பட்டதோ அதே நோக்கத்திற்காக செலவு செய்துவருகின்றோம், மேலும் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நமது மஹல்லா சகோதரர்கள் நமது மஹல்லாவின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உங்களின் மேலான நல்ல பல கருத்துக்களை எங்களுக்கு வழங்கிடுமாறு அன்புடன் தெரிவித்து கொள்கிறோம், கருத்துக்கள் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி tiyawest@gmail.com

என்றும் அன்புடன்,
TIYA நிர்வாகம் அமீரகம் & அதிரை

Advertisement

Close