முத்துப்பேட்டையில் காணாமல் போன குழந்தையை 30 நிமிடங்களில் கண்டுபிடித்த போலிஸார்!

முத்துப்பேட்டை பி.எஸ்.கே.காலணி வாசலில் நின்ற ஆயிஷா நஸ்ரின் என்ற 3வயது குழந்தை இன்று காலை காணாமல் போனது. பதறிப்போன அக்குழந்தையின் பெற்றோர்கள் முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனை அடுத்து குழந்தையை தேடும் வேலையில் விரைந்து செயல்பட்ட போலிசார் வெறும் 30 நிமிடங்களில் குழந்தையை கண்டுபிடித்தனர். முத்துப்பேட்டை காவல்துறையினரின் இந்த அசாத்திய வேகம் அனைவரையும் வியக்க வைத்தது. குழந்தையை கண்டுபிடித்த போலிசார் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விரைந்து தங்கள் குழந்தையை கண்டுபிடித்து தந்த போலிஸாருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close