அதிரையில் இன்று நடந்த 3வது வாகன விபத்து! பீதியில் மக்கள்!

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் எதிர்பாராத விதமாக மோதினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். முதியவர் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்களால் விரைந்து ஆட்டோ மூலமாக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிரையில் இன்று நடக்கும் 3 வது சாலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிரையில் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement

Close