அதிரையில் சமுக ஒற்றுமையை ஏற்படுத்திய ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(புகைப்படங்கள் இணைப்பு)

தியாக திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சமூக நல்லிணக்க ஒற்றுமைக்காக அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (12-10-2014) பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மெளலவி M.A.முஹம்மத் இத்ரீஸ் M.A.,M.Phil,DFA,DFU,(தலைவர் & விரிவுரையாளர் -அரபித்துறை, கா.மு.கல்லூரி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .ஜனாப் S.K.M..ஹாஜா முகைதீன்,M.A.,B.Sc.,B.T, (தலைமை ஆசிரியர் ஓய்வு) கா.மு.ஆ .மேல்நிலை பள்ளி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .இதில் அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள் முன்னிலை தாங்கினார்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  திருமிகு K.இராமநாதன்,M.L. (உதவி அமர்வு நீதிபதி -அரசு இணை செயலாளர் சட்டத்துறை -சென்னை) ,ஜனாப் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது ,துணைத்தலைவர் ,இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)-சென்னை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் .இதில் மாற்று மத சகோதர்கள் இஸ்லாம் சம்மந்தமான கேள்விகளுக்கு டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் பதில் அளித்தார் .இந்நிகழ்ச்சியில் ஜனாப் M.ஹாஜா முகைதீன் M.SC.M.Phil, அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் . 

இறுதியாக இந்நிகழ்ச்சியில் வந்தோருக்கு பகல் விருந்து உபசரிப்பு நடைபெற்றது .  

Advertisement

Close