அதிரையில் துவங்கியது ஈத் மிலன் நிகழ்ச்சி ! (புகைப்படங்கள் இணைப்பு)

தியாக திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று (12-10-2014) பவித்ரா திருமண மண்டபத்தில் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் மொளலவி M.A.முஹம்மத் இத்ரீஸ் M.A.,M.Phil,DFA,DFU,(தலைவர் & விரிவுரையாளர் -அரபித்துறை,கா.மு.கல்லூரி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .ஜனாப் S.K.M..ஹாஜா முகைதீன்,M.A.,B.Sc.,B.T, (தலைமை ஆசிரியர் ஓய்வு) கா.மு.ஆ .மேல்நிலை பள்ளி அவர்கள் தலைமை வகிக்கின்றார்கள் .இதில் அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர் சிறப்பு விருந்தினராக திருமிகு K.இராமநாதன்,M.L. (உதவி அமர்வு நீதிபதி -அரசு இணை செயலாளர் சட்டத்துறை -சென்னை) அவர்கள் கலந்து கொண்டு உள்ளார் .
இந்த நிகழ்ச்சிக்கு அதிரை மற்றும் வெளிவூர் சகோதர்கள் வந்த வண்ணம் உள்ளனர் .      

Advertisement

Close