ஹாஜியை அதட்டிய இராணுவ வீரர் ! கடும் நடவடிக்கை எடுக்க போவதாக சவுதி அரசு அறிவிப்பு !


ஹஜ் உடைய காலங்களில் சவுதி அரேபியா அரசின் காவல் துறை ராணுவம் உட்பட அனைவர்களும் ஹாஜிகளுக்கான பாது காப்பு பணியில் 
இவர்கள் அனைவர்களும் ஹாஜிகளோடு கனிவோடும் கருணையோடும் மனித நேயத்தோடும் ஹாஜிகளுக்கு சிறு இடையுறு கூட கொடுக்கமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு பிரப்பிக்க பட்டுள்ள கட்டாய உத்தரவாகும்
இந்த உத்தரவை மதித்தே அனைத்து பாது காவலர்களும் நடந்து கொள்வர் ஹாஜிகளுக்கு எந்த அளவுக்கு கனிவுடன் பணியாற்ற முடியுமோ அந்த அளவிர்கு கனிவுடன் பணியாற்றுவர்
இந்த விதிகளுக்கு மாற்றமாக சவுதி பாது காப்பு படையை சார்ந்த ஒரு வீரர் ஹாஜி ஒருவரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டதாக ஒரு புகை படம் சமூக வலை தளங்களில் வெளியாகி பரப்பை ஏர்படுத்தியது

ஹரம் வளாகத்தில் அமைக்கபட்டுள்ள ஒரு தர்காலிக தடுப்பை தாண்ட முனையும் ஒரு ஹாஜியோடு சற்று கடுமையாக ஒரு படை வீரர் நடந்து கொள்ளும் காட்சி தான் அது
இது மிகப்பெரிய தவறு இல்லை என்றாலும் அந்த வீரர் மீது யாரும் முறைபடி புகார் செய்ய வில்லை என்றாலும் வலை தளங்களில் வெளியான புகை படத்தை ஆதாரமாக கொண்டே அந்த வீரரின் மீது நடவடிக்கை எடுக்க சவுதி அரசு உறுதி எடுத்துள்ளது

இனி எந்த காலத்திலும் அது போன்று எந்த படை வீரரும் நடந்து கொள்ளாத அளவிர்கு அவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தின் உயர் அதிகாரிக்கு பரிந்துரைக்க பட்டுள்ளதாக மக்காவின் ஆளுனர் அறிவித்துள்ளார்
ஹாஜிகளின் மீது நடத்த படும் ஒரு சிறு தவறை கூட பெரும் குற்றமாக சவுதி அரசு கருதுவதையே இந்த நிகழ்வுகள் விளக்குகின்றது

நன்றி : உண்மை தமிழன் 

Advertisement

Close