ஆமாம். இபோது உள்ள நவீன இணைய யுகத்தில் நாம் எந்த அளவிற்கு இணையக் கருவிகளை நமது அனைத்து விதமான செயல்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தி வருகிறோமோ, அதே அளவிற்கு அதில் இருந்து வெளிப்படவுள்ள ஆபத்துகளும் அதிகம் இருக்கும் என்று அமெரிக்க இணையதள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இப்போது ஷாப்பிங் முதல் மருத்துவமனை பில்கள் முதற்கொண்டு அனைத்தையும் வெகு சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் கிரெடிட் கார்டு தகவல்களை வைத்து பணம் கொள்ளையடிப்பது அதிக அளவு நடந்து கொண்டிருந்தது. தற்போது உலகம் முழுக்க எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அவை பெருமளவு குறைக்கப்பட்டாலும், அவ்வப்போது நடப்பது பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதுபோல, இனி வரும் காலங்களில் இணையத்தைப் பயன்படுத்தி நாம் பயன்படுத்தும் சாதனங்களைக் கட்டுப்படுத்தி நம் தகவல்கள், உடமைகள் என அனைத்தையும் பறிக்க வாய்ப்புண்டு என்பது தான் அவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியான செய்தி. இதனைப் பலர் கேலி செய்யலாம். ஆனால், அதன் தீவிரத்தை உணரும்போதுதான் அதில் எத்தனை பெரிய பயங்கரம் உள்ளது என்பதை உணர முடியும்.

ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனமான யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று வளர்ந்து வரும் இந்த தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் முதல் கார், வீடு வரை அனைத்தும் இணையத்தில் இணைக்கப்பட்டு விட்டன. ஆனால், அதற்கான சேப்டி புரோட்ட்டோகால்கள் சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய அளவில் எளிமையாக உள்ளன. அப்படி இருப்பதால், ஹாக்கர்களும் இதனை எளிதாக உட்புகுந்து கட்டுப்படுத்த வழிவகுக்கின்றன.

இணையத்தில் இணைக்கப்பட்ட வீட்டிற்குள்ளேயோ அல்லது காரிலோ நீங்கள் இருக்கும்போது அதனை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தால் உங்களை மிரட்டிப் பணம் பிடுங்கவோ, பிணையக் கைதியாக்கவோ  முடியும். கொலைகள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. 2014ஆம் ஆண்டிற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ராஸ்முஸன் கூறுகையில், ''இப்படி கட்டமைக்கபட்ட புரோகிராம்களுக்குள் ஊடுருவ ஹாக்கர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள். இப்போது அதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 'இணையக் கொலைகள்' நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே, இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் நம் தொழில்நுட்ப அறிஞர்கள் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இணையத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட நபரை மிரட்டிப் பணம் பறிப்பது, அவரது தகவல்களைத் திருடி பிளாக் மெயில் செய்வது, அவரது சாதனத்தை ஹாக் செய்து அதன் மூலம் அவர்களைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் நடைபெற வாய்ப்புக்ள் அதிகம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

' />

அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள் ! (ஒரு சிறப்பு பார்வை)

‘காரில்சென்று கொண்டிருந்த ஒருவர் இணைய தள தகவல் திருடர்களால் கொலை’, ‘ஈமெயில் அக்கவுண்ட் முடக்காமல் இருக்க மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது’ என்பது போன்ற செய்திகளை நீங்கள் இனி வரும் காலங்களில் நாளிதழ்களில் படிக்க வாய்ப்புண்டு.

ஆமாம். இபோது உள்ள நவீன இணைய யுகத்தில் நாம் எந்த அளவிற்கு இணையக் கருவிகளை நமது அனைத்து விதமான செயல்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தி வருகிறோமோ, அதே அளவிற்கு அதில் இருந்து வெளிப்படவுள்ள ஆபத்துகளும் அதிகம் இருக்கும் என்று அமெரிக்க இணையதள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இப்போது ஷாப்பிங் முதல் மருத்துவமனை பில்கள் முதற்கொண்டு அனைத்தையும் வெகு சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் கிரெடிட் கார்டு தகவல்களை வைத்து பணம் கொள்ளையடிப்பது அதிக அளவு நடந்து கொண்டிருந்தது. தற்போது உலகம் முழுக்க எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அவை பெருமளவு குறைக்கப்பட்டாலும், அவ்வப்போது நடப்பது பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதுபோல, இனி வரும் காலங்களில் இணையத்தைப் பயன்படுத்தி நாம் பயன்படுத்தும் சாதனங்களைக் கட்டுப்படுத்தி நம் தகவல்கள், உடமைகள் என அனைத்தையும் பறிக்க வாய்ப்புண்டு என்பது தான் அவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியான செய்தி. இதனைப் பலர் கேலி செய்யலாம். ஆனால், அதன் தீவிரத்தை உணரும்போதுதான் அதில் எத்தனை பெரிய பயங்கரம் உள்ளது என்பதை உணர முடியும்.

ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனமான யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று வளர்ந்து வரும் இந்த தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் முதல் கார், வீடு வரை அனைத்தும் இணையத்தில் இணைக்கப்பட்டு விட்டன. ஆனால், அதற்கான சேப்டி புரோட்ட்டோகால்கள் சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய அளவில் எளிமையாக உள்ளன. அப்படி இருப்பதால், ஹாக்கர்களும் இதனை எளிதாக உட்புகுந்து கட்டுப்படுத்த வழிவகுக்கின்றன.

இணையத்தில் இணைக்கப்பட்ட வீட்டிற்குள்ளேயோ அல்லது காரிலோ நீங்கள் இருக்கும்போது அதனை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தால் உங்களை மிரட்டிப் பணம் பிடுங்கவோ, பிணையக் கைதியாக்கவோ  முடியும். கொலைகள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. 2014ஆம் ஆண்டிற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ராஸ்முஸன் கூறுகையில், ”இப்படி கட்டமைக்கபட்ட புரோகிராம்களுக்குள் ஊடுருவ ஹாக்கர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள். இப்போது அதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘இணையக் கொலைகள்’ நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே, இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் நம் தொழில்நுட்ப அறிஞர்கள் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இணையத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட நபரை மிரட்டிப் பணம் பறிப்பது, அவரது தகவல்களைத் திருடி பிளாக் மெயில் செய்வது, அவரது சாதனத்தை ஹாக் செய்து அதன் மூலம் அவர்களைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் நடைபெற வாய்ப்புக்ள் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Close