வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக் !

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் ‘மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷ’னை உருவாக்கிய வட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டொலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி வட்ஸ்அப் நிறுவனத்தின் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்கள் மொத்த மதிப்பு 22 பில்லியன் டொலர் அளவு உயர்ந்து திங்கட்கிழமை வட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்.
மேலும் இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைந்தார்.
கலிபோர்னியாவின் மெலனோ பார்க் மாகாணத்தில் கூகிள், மைக்ரோசொப்ட் மற்றும் அப்பிள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. இதில் எந்த ஒரு நிறுவனமும் வாட்ஸ்அப் நிறுவனத்தை போன்று 22 பில்லியன் டொலர் அளவு முதலீடு செய்து நிறுவனத்தை கைபற்றியதில்லை.
இந்நிறுவன கைபற்றுதல் அறிவிப்பின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயர்ந்தது. மேலும் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிறுவனம் வட்ஸ்அப் நிறுவனத்திற்கு 21.8 பில்லியன் டொலர் மதிப்புடைய பங்கு மற்றும் பத்திரங்கள் அளித்ததுமட்டும் அல்லாமல் இந்நிறுவன தலைவரை நிர்வாக குழுவில் இணைத்துள்ளது.
whatsup facebook
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், இந்தியா, மெக்சிக்கோ மற்றும் ரஷ்யா நாடுகளில் அதிகளில் வாடிக்கையாளர் உள்ளனர். மேலும் இந்நிறுவனத்திற்கு 500 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் பேஸ்புக் நிறுவனம் பல நிறுவனங்களை கைபற்றிய நிலையில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் கைபற்றியுள்ளது. பெங்களுரூ தலைமையகமாக வைத்து துவங்கப்பட்ட லிட்டில் ஐ லேப்ஸ் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் சுமார் 15 மில்லியன் டொலருக்கு கைபற்றியுள்ளது.
முழுமையான கைபற்றுதலின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 32 சென்டுகள் உயர்ந்து 77.76 டொலர் என்ற விலைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

Advertisement

Close