துருக்கி போராட்டத்தில் வன்முறை: 9 பேர் பலி !

கொபானி நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து காக்க வலியுறுத்தி, துருக்கியின் தலைநகர் அங்காரா, பெரிய நகரான இஸ்தான்புல் உள்பட பல இடங்களில் குர்து இன மக்கள் நேற்று முன்தினம் பெருமளவில் போராட்டங்கள் நடத்தினர்.

அப்போது வன்முறை மூண்டது. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தண்ணீரைப்பீய்ச்சி அடித்தனர். அப்போது போராட்டக்காரர்களும், போலீசாரும் மோதிக்கொண்டனர். இந்த மோதல்களில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என துருக்கி உள்துறை அமைச்சர் எப்கான் அலா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே கொபானி நகரில், ஐ.எஸ். இயக்கத்தினர் முன்னேறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன .

Advertisement

Close