அதிரையில் மீண்டும் வெளிச்சம் பெற்றது சுரைக்காய் கொள்ளை!

அதிரை சுரைக்காய் கொள்ளை அருகே உள்ள பிள்ளை குளம் அருகே ஒரு ட்ரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து சுரைக்காய் கொள்ளை, சால்ட் லேன், பிள்ளைமால் தெரு, மக்தூம் பள்ளி தெரு, ஆப்பக்காரத் தெரு, சங்கத்துக் கொள்ளை, பழஞ்செட்டித் தெருவின் ஒரு சில மின் கம்பங்களுக்கு மின் பகிர்மானம் செய்யப்படுகிறது.

மிகவும் பழைய இந்த ட்ராஸ்பார்மரும், இப்பகுதிகளில் உள்ள மின்சார லைங்களும் பல வருடங்களாக பழுதாகிக் கொண்டே இருந்தன. இந்நிலையில் நேற்று முந்தினம் இந்த ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது. எந்த வித அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை என்றாலும் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதிரை மின்வாரிய அதிகாரிகள் மூன்று நாட்களாக சரி செய்து வேறு ஒரு ட்ராண்ஸ்பார்மரை மாற்றியுள்ளனர். இதனை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு அதிரை சுரைக்காய் கொள்ளை, சால்ட் லேன், பிள்ளைமால் தெரு, மக்தூம் பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டன. 3 நாட்கள் கடும் அவதிக்கு பின் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் கிடைத்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close