அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கடற்கரை தெரு முஹல்லாவாசிகள்! (VIDEO)

அதிரையில் கடற்கரை தெரு பல நாட்களாக தண்ணீர் பற்றாகுறை நிலவிவருகிறது. இதனால் அப்பாகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அதிரை பெரூராட்சியிடம் பல முறை புகாரளித்தும் எந்தவொரு பயனும் இல்லை என்கின்றனர். இதனால் கவுன்சிலர் சே.மு.ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையில் கடற்கரை தெரு முஹல்லாவாசிகல் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றினைந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றிகையிட்டனர்.

இதனை அடுத்து அதிரை காவல்துறையினர் பேரூராட்சியில் வந்து சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து அதிரை இணையதள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவுன்சிலர் ஹாஜா முஹைதீன் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை தீரவில்லையானால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

Advertisement

Close