அதிரையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன!

இடம்: காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி; படம்: இர்ஷாத்

அதிரையில் அனைத்து பள்ளிகூடங்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறையோடு ஹஜ்ஜுப் பெருநாள், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறைகள் ஒன்றாக விடப்பட்டது. 7ம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் குழுசங்கம் அம்மா கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.

அரசியல் காரணங்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்று சென்னையை சேர்ந்த வழக்கரிஞர் ஒருவரால் உயர்னீதி மன்றத்தில் பொதுனல வழக்கு ஒன்று பதியப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி விசாரித்த நீதிபதிகள் பள்ளிகள் அனைத்தும் இன்று திறப்பதற்கு உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

Advertisement

Close