தினத்தந்தி செய்தியை கண்டு ஆக்கிரோஷத்துடன் வெகுண்டெழுந்த அதிரை இளைஞர்கள்!


நேற்றைய தினம்
தினத்தந்தி நாளிதழில் இஸ்லாமிய பெண்களை தீவிரவாதிகளாகவும் விபச்சாரிகளாகவும்
சித்தரித்து ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து நமது அதிரை பிறையில் ஒரு
பதிவு பதிந்திருந்தோம்.இதனை கண்ட நமதூர் இளைஞர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த
இருப்பதாக நமக்கு தகவல் தந்தனர். இதை நேற்று இரவு நமது தளத்தில் செய்தியாக
பதிந்திருந்தோம். முகநூலில் இப்பதிவு அதிகம் பகிரப்படவே அதிரையின் அருகில் உள்ள
ஊர்களை சேர்ந்த சமுதாய இளைஞர்களும் நமதூருக்கு வருகை தந்தனர்.
இதனை அடுத்து சுமார்
50 க்கும் மேற்பட்டோர் அதிரை புதுப்பள்ளியில் அசர் தொழுதுவிட்டு இப்பிரச்சனை
குறித்து கலந்தாலோசித்தனர். இதனை அடுத்து அனைவரும் நடந்து அதிரை காவல் நிலையத்துக்கு
சென்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்க்கு அனுமதி கேட்டனர். ஆனால் சில
சிக்கல்களால் அதிரை காவல்துரையால் இன்றும் நாளையும் அனுமதி வழங்கமுடியாது என்று
கூறினார். எனவே நாளை மறுதினம் 8ம் தேதி மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை
ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த பேரனியில் அதிரை
மற்றும் பக்கத்து ஊர் இளைஞர்கள், கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர், விடுதலை சிறுத்தையை சேர்ந்த புருசோத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

தலைமை: அதிரை அன்வர்
முன்னிலை: ஜியாவுத்தீன் (து.பொது செயலாளர், தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி)

செயலாளர்: ஐ.ஜஹபர் சாதிக் (தஞ்சை மாவட்ட ஒருங்கினைப்பாளர், இந்திய தேசிய கட்சி) 


a

Advertisement

Close