அதிரை மின்சார வாரியத்தை முற்றுகையிட்ட அதிரை இளைஞர்கள்!


அதிரையில் தற்பொழுது 2:30 மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடும் அதிரை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர்.

மேலும் இதனால் குர்பானியிடப்பட்ட கறிகள் அனைத்தும் பலர் வீடுகளில் வீனாகும் நிலை உள்ளது. பல நாட்களாக இது போன்று மின்சாரம் தடை செய்யப்படாமல் ஹஜ்ஜு பெருநாளான இன்று இவ்வளவு நேரம் மின்சாரத்தை அதிரை மின்சார வாரியம் தடை செய்துள்ளது. இதை வேண்டும் என்றே அதிரை மின்சார வாரியத்தினர் செய்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மின்சார வாரியத்தின் இந்த செயலை கண்டித்து அதிரை இளைஞர் சிலர் EB அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

Advertisement

Close