Adirai pirai
posts

அதிரையில் சாலை விபத்து! ஒருவர் படுகாயம்!

அதிரை ஈ.சி.ஆர் சாலை நரசிங்கபுரம் அருகே காரைக்கால் நோக்கி ஒரு மினி டெம்போ சென்றுக்கொண்டிருந்தது. வேகமாக சென்றுக்கொண்டிருந்த டெம்போ குறுக்கே மாடு ஒன்று குறுக்கிட்டது. மாட்டின் மீது மோதாமல் இருக்க டெம்போ ஓட்டுனர் வண்டியை வேகமாக திருப்பும்போது எதிரே வந்த ட்ராக்டர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டெம்போ ஓட்டுனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்