கலைஞரின் சொத்து மதிப்பு 62.99 கோடி ரூபாய்!

திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் பெயரிலும், தன் மனைவியர் பெயரிலும் மொத்தம் ரூ.62 கோடியே 99 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூரில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், கையிருப்பு ரொக்கமாக 50 ஆயிரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 ரூபாய் இருப்பதாக, வேட்புமனுவில் கருணாநிதி தெரிவித்துள்ளார். தனது மனைவி தயாளு அம்மாள் பெயரில் ஏழு கோடியே 44 லட்சத்து ஏழாயிரத்து 178 ரூபாய் மதிப்பிலும், ராசாத்தி அம்மாள் பெயரில் 37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மொத்தம் தனது மனைவியரின் பெயரில் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாகவும் கருணாநிதி வேட்பு மனுவில் கூறியுள்ளார். கருணாநிதி பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், அவரது பெயரில் கார்கள், நிலங்கள், வங்கிக் கடன் எதுவும் இல்லை என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Close