தே.மு.தி.க வுக்கு முரசு சின்னம் இல்லை!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதன் காரணமாக தேமுதிக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

மாநில கட்சிகள் வேறு மாநில தேர்தலில் போட்டியிடும் போது சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க ‌வேண்டும். ஆனால் தேமுதிக சார்பாக சின்னம் கேட்டு விண்ணப்பிக்காத காரணத்தால் சுயேட்சை சின்னங்களில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Close