குவைத்தில் பணிபுரியும் சகோதரர்களின் கவனத்திற்கு!

kapகுவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர் தங்களுடைய நாட்டிற்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிப்பு செய்ய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் மீண்டும் வலியுறுத்தல்.

இதன்படி 100 KD அனுப்பினால் 2% 100KD முதல் 499 KD வரை 3% 500 KD முதல் அதற்கு மேல் அனுப்பும் பணத்திற்கு 4% விதிக்கவும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டினர் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய நாட்டுக்கு அனுப்பும்
பணம் குவைத்திற்கு ஒரு ஆண்டிற்கான நிதி நிலை திட்டத்தை விட அதிகம் என்றும் இதன் மூலம் குவைத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றுஅவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் இதே தீர்மானத்தை இரண்டு எம்பிக்க ள்வலியுறுத்தினார்கள். ஆனால்அ ந்த நேரத்தில் இதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஆனால் தற்போது வளைகுடா நாடுகளில் நிலவிவரும் எண்ணெய்
சம்மந்தப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த புதிய வலியுறுத்தலுக்கு அரசு என்ன முடிவும் எடுப்பார்கள் என்று தெரியவில்லை.

Close