சவுதியில் பின்லாடின் நிறுவத்தின் வண்டிகளை எரித்து நாசமாக்கிய தொழிலாளர்கள்!

saudi binladenசவுதி அரேபியாவில் சம்பளம் கொடுக்காத தனியார் நிறுவனத்தின் பேருந்து வண்டிகளை எரித்து நாசமாக்கிய தொழிலாளர்கள்!
சவுதி பின்லாடின் நிறுவனம் நடத்தி வந்த தனியார் பஸ் வண்டிகளில் வேலை செய்த 10ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். அவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்காத நிலையில் நாட்டை விட்டு வெளியேறும் விசா அடித்துக் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் பின்லாடின் நிறுவனத்தின் பேருந்து வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிகக் குறைவாக இருப்பதால், சவூதி அரேபியாவின் பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது. அதனால் பல நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் படுகின்றனர். ஒசாமா பின்லாடனின் குடும்ப நிறுவனமான பின்லாடின் குறூப், ஏற்கனவே மெக்கா கிறேன் விபத்து காரணமாக பெருமளவு நஷ்டத்தை சம்பாதித்திருந்தது. பேருந்து வண்டிகள் கொளுத்தப் பட்ட சம்பவமும் மெக்கா நகருக்கு அருகில் தான் நடந்துள்ளது.

Close