அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – இலவச மின்சாரம், செல்போன், இணையதள வசதி

அ.தி.மு.க.வி-ன் தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.

* விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி

* 2016  – 2021 ஆண்டு காலங்களில் ரூ.40000 கோடி பயிர்க் கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

* அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்

* மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை ரூ.5000ஆக வழங்கப்படும்

* சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்

* மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை

* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தீவிர நடவடிக்கை

* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணையதள வசதி

* மகப்பேறு உதவித் தொகை ரூ.18,000-ஆக உயர்த்தப்படும்

* பொங்கல் திருநாளக்கு கோ ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500க்கு கூப்பன்
a
* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்

* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்ணமில்லை

* அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா பேங்கிங் கார்டு

* மகளிர் பணி மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனத்திற்கு 50 சதவீதம் மானியம்

* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் நிதி ரூ.10 கோடியாக அதிகரிக்கப்படும்

* நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்திற்க கட்டணம் கிடையாது

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்

* அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும்

* சென்னையில் மெட்ரோ ரயில் மேலும் புதிய வழித்தடத்தில் அமைக்கப்படும்

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கைப்பேசி வழங்கப்படும்

* புதிய கிராணைட் கொள்கை வழங்கப்படும்

* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்

* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

* தாலிக்கு வழங்கப்படும் தங்கம் 1 சவரனாக உயர்த்தப்படும்

* தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்

* மகளிர் பேறுகால விடுப்பு 9 மாத காலம்

* பேருந்துநிலையம், வணிகவளாகம், பூங்காக்களில் கட்டணமில்லை வைபை வசதி

* தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்

Close