+2 தேர்வு முடிவுகள் : மே 17 வெளியிடப்படும்

+2பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 25-ல் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் காலை 10.31 மணி முதல் 12 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் காலை 9.31 மணி முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in

ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் இலவசமாக அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 4 முதல் ஏப்ரல் 2 வரை நடந்த பிளஸ் டூ தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.39 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை நடந்த பத்தாம் வகுப்பு தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10.72 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

Close