அதிரையில் வெடிவெடித்து கொண்டாடிய அ.தி.மு.க வினர்! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக
ஜெயலலிதா இன்று சனிக்கிழமை (மே.23) பொறுப்பேற்றுக் கொண்டார். 2 பெண்கள் உட்பட 28
பேர் அமைச்சர்களாகி உள்ளனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப்
பிரமாணத்தையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார்.
இதனை கொண்டாடும் விதமாக அதிரை பேருந்து நிலையம்
அருகே அ.தி.மு.க வினர் ஒன்று கூடி உற்சாகமாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்
வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இதற்க்கு அதிரை அ.தி.மு.க செயலாளர்
திரு.பிச்சை தலைமை தாங்கினார். இதில் அதிரை அ.தி.மு.க துணை செயலாளர் முஹம்மது
தமீம், நகர பாசரை தலைவர் அஹமது தாஹிர், அதிரை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக
நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close