ஒரத்தநாடு அருகே அமைச்சர் வைத்திலிங்கம் மீது செருப்பு வீச்சு!

seruppadiஒரத்தநாடு அதிமுக வேட்பாளரான அமைச்சர் வைத்திலிங்கம், நேற்று முன்தினம் தென்னமநாடு கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கோபி என்ற காவலர், தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரவில்லை என்று கூறி, வைத்திலிங்கம் மீது காலணியை வீசினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், கோபியை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல்நிலையத்தில் கோபி புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவோணம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த கோபி, திடீரென ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த கோபி மண்ணெண்ணை குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Close