பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்கு சேகரிக்க சென்றால் வாகனங்கள் பறிமுதல்

rajesh-lakhani-300x300பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பரப்புரை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். பிரச்சாரத்தில் ஈடுபடுவோருடன் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்கள் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் 19-ம் தேதிக்கு பிறகு தான் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்கு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் என்றார்.
மேலும் தேர்தல் பணி குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் சைதி காணொலிக் காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி மூலம் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, வருமான வரி ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக லக்கானி தெரிவித்தார்.

Close