இந்தியாவில் ஐபோனுக்கு தடை!

iphone banned in india adiraipiraiஒரு முறை உபயோகிக்கப்பட்ட ஆப்பிள் கைபேசிகளை இறக்குமதி செய்து, மறு விற்பனை செய்வதற்கு தடை விதிக்க இந்திய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் மின்னணு கழிவுகளை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு முறை உபயோகிக்கப்பட்ட ஆப்பிள் கைபேசிகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டாம் தர கைபேசிகளால்,  பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் ஆப்பிள் கைபேசிகளினின் விற்பனை சரிவடைந்திருக்கும் நிலையில், முன்னணி வர்த்தக சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் விற்பனையை அதிகரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.

இதற்காக, வெளிநாடுகளில் ஒருமுறை உபயோகிக்கப்பட்ட ஆப்பிள் கைபேசிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Close