அதிரை பிறை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

கருத்துக்கணிப்பு -adirai pirai -

பட்டுக்கோட்டை தொகுதிக்கான கருத்துகணிப்பு நமது அதிரைபிறையில் சென்ற வாரம் உங்களது ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் ஒரு பதிவு ஒன்றை பதிந்திருந்தோம். அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெற்றி பெற்றது SDPI Z. முகம்மது இலியாஸ் என்பதை மேலுள்ள புகைப்படத்தின் மூலம் பார்த்திருப்பீர்கள்.

அதிரை பிறை நடத்திய இந்த கருத்துகணிப்பில் அதிகளவில் அதிரையினரே வாக்களித்துள்ளனர். மேலும் இண்டெர்நெட் பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் மட்டுமே இங்கு வாகளிக்கவும் முடியும். இதை கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த கட்சி தான் வெற்றிபெறும் இல்லை இந்த கட்சி தான் வெற்றிபெறும் என முடிவை செய்ய முடியாது. இருந்தாலும் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக(கூட்டணி) அல்லது அதிமுக இவை இரண்டிற்கு மட்டுமே போட்டிகள் நிலவிவந்த நிலையில், இப்போது ஒரு புதிய முயற்சியில் SDPI கட்சி நமது தொகுதியில் போட்டியிட்டு அதிரையினரின் அதிகபடியான ஆதரவை பெற்று நமது கருத்துகணிப்பில் வெற்றிபெற்றுள்ளது.

2016

இருந்தாலும் மே19 வரை தமிழகமே பொருத்திருக்க தான் வேண்டும்.

Close