துபாயில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் அனைவரின் பாராட்டை பெற்ற கீழக்கரை முஜாஹித்தீன்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முஜாஹித்தீன்(23) சிறு வயதிலேயே வாலிபால் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் உள்ளூர் மூர் விளையாட்டு கிளப் மூலம்  மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்று சிறப்பாக விளையாடி தான் சார்ந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். ஏராளாமான சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் இந்திய அளவிலான அணியிலும்  பகுதி நேரமாக விளையாடியுள்ளார். மிக சிறப்பான முன் கள ஆட்டக்காரராக திகழும் இவர் சமீபத்தில்  துபாயில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் தனியார் நிறுவனம் சார்பில் பங்கேற்று மிகச்சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். முன்னனி விளையாட்டு வீரர்கள் இவரது சிறப்பான ஆட்டத்தை கவனித்து பாராட்டினர்.

இவர் கூறியதாவது …   பல்வேறு அணிகளில் விளையாடினாலும் இது வரை  மாநில அளவிலான அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்து இந்திய அணியில் பெற்றால் சர்வதேச அளவில் சாதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்கிறார்.

Close