அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது அதிரை AFFA! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை AFFA அணி நடத்தும் கால்பந்தாட்ட தொடர்போட்டி கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இத்தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் இரண்டு கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் அதிரை AFFA அணியினை எதிர்த்து புதுக்கோட்டை அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் இறுதி 5 நிமிடங்களில் AFFA அணி வீரர் கோல் விளாச AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் கலைவானர் 7ஸ் கண்டனூர் அணியை எதிர்த்து சென்னை அணி களமிறங்கியது. இதில் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கண்டனூர் அணியினர் கோல் அடித்தனர். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணியும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

4f2519a2-6d7b-45e5-b1c0-d6c739b7c494 5a8e2f35-01be-4e9a-8cc3-d4d17d30590f 06e391a6-8d7f-484a-98ce-8e669917b3f8 61a60df8-c204-477e-8af5-96eccac7c63e 347ca2af-19a7-4e1a-ba1c-e7e7824ba33a 767d8442-a876-44b6-b1ff-6fee1dc7b2ea d4b5792c-7201-4c61-81ce-ab0a2c04508b d30411ff-5069-4ac6-ba97-c85a572cdef2

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author