அதிரை பிறையின் நிர்வாக அறிவிப்பு!

அதிரை ரஹ்மானியா மதர்ஸாவின் 100வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடைப்பெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான உலமாக்கள், பொதுமக்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இதற்க்கான ஏற்பாடுகள் அதிரை ரஹ்மானியா மதர்ஸா அருகே சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிரை பிறை சார்பாக மனதார ஏற்றுக்கொள்வதோடு ரஹ்மானியா மதர்ஸவின் பட்டமளிப்பு விழா மேடை மற்றும் மக்கள் குழுமியிருக்கும் புகைப்படங்கள் இன்றி செய்தியை நமது தளத்தில் பதியப்படும் என்பதையும் வாகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இதில் கலந்துக்கொள்பவர்களும் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு  இணங்க புகைப்படங்களை எடுக்க வேண்டாம் எனவும், நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close