FLASH NEWS: அதிரை வாக்குச்சாவடிக்களுக்குள் புகுந்த மழை வெள்ளம்! மின்வெட்டால் குழப்பத்தில் வாக்காளர்கள்!

சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மழையையும் பொருப்படுத்தாமல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மழை காரணமாக அதிரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மின்தடை காரணமாக வாக்காளர்களுக்கு டார்ச் லைட் கொடுத்து வாக்களிக்க சொல்கின்றனர். இதனால் ஏற்பட்ட குறைந்த வெளிச்சம் காரணமாக முதியவர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னத்தை தேர்ந்தெடுப்பதில் குழம்பிவருகின்றனர்.

hmm

மேலும் பயங்கர மழை காரணமாக அதிகமான வாக்குச்சாவடிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் ஓரிரு வாக்குச்சாவடிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான அதிரையர்கள் மழையை பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

cffe44ab-3645-470c-8778-07dff67a75cb 4e9ca253-d0ed-4889-915c-68e6e0854096 e236c3f2-e0d4-413c-b400-80a9c40476fd

Close