சென்னை மக்களை மீண்டும் அச்சுறுத்த வரும் வெள்ளம்! மக்களே எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பல நகரங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வந்த நிலையில், சனிக்கிழமையன்று தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்தது.

சென்னையில் விடிய விடிய மழை

காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் பல இடங்களில் பரவலாக நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வெப்பம் மறைந்து குளுமையான காற்று வீசியது. சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் கனமழை

சென்னை அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

தரைக்காற்று வீசும்

மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். தரைக்காற்று அதிகமாக வீசும். அதிகபட்மாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு கூறினார்.

செம்பரம்பாக்கம்

திங்கள்கிழமை இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் பகுதியில் 120 மி.மீ மழை பெய்துள்ளது. சோழவரம் 37, தாமரைப்பாக்கம் 37, செங்குன்றம் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Close