முத்துப்பேட்டையில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 106 வயது மூதாட்டி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அனைத்து தேர்தலிலும் ஓட்டு போட்ட இந்தியாவின் மூத்த பெண் வாக்காளர் 106 வயது மூதாட்டி தனது சகோதரிகளுடன் சென்று ஓட்டுப்போட்டார்

முத்துப்பேட்டை மே -17

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தி மறைந்த வெங்கடாச்சலம் மனைவி சமுத்திரத்தம்மாள். 106 வயதை தாண்டும் இவர் இன்னும் இளமையோடும் கலகலப்பான பேச்சோடும் மகிழ்;ச்சியாக காணப்படுகிறார்.. வேதாரண்யம் தகட்டூர், ஆரியங்காடு சீனிவாசத் தேவர் கோவிந்தம்மாள் ஆகியோருக்கு பிறந்த மூத்த மகள் தான் சமுத்திரத்தம்மாள் இவர் உடன் பிறந்தவர்கள் காசியம்மாள், ஏலம்மாள், தேனம்மாள், வைரத்தம்மாள், மின்னல்கொடி, சுந்தரத்தேவர், கனகசுந்தரம், பரமசிவம், ரெத்தினம் உட்பட 12 பேர். தற்பொழுது 8 பேர் உள்ளனர் அவர்கள் எல்லோரும் ஆரோக்கிமாக உள்ளனர் . சமுத்திரத்தம்மாளுக்கு குழந்தை இல்லாததால் தனது நான்காவது சகோதரியான தேனம்மாளை கணவர் வெங்கடாச்சலத்திற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்கு ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், ராஜ்குமார், நாகராஜன், சுரேஷ் ஆகிய ஐந்து மகன்கள் . அனைவருக்கும் திருமணமாகி பேரன், பேத்திகள் உள்ள நிலையில் சமுத்திரத்தம்மாள் அவர்களை தனது பிள்ளைகளாக நினைத்து ஒட்டி உறவாடி தனது சகோதரி தேனம்மாவை தனது தோழி போல் இன்றுவரை இணைப்பிரியா சகோதரியாக மகழ்;சசியாக வாழ்ந்து வருகின்றனர் .; சமுத்திரத்தம்மாள் தற்பொழுது தனது சகோதரி தேனம்மாளுடன் மகன் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து வருகிறார்கள் இந்தநிலையில் இதுவரை இந்தியாவில் நடந்த அணைத்து பராளுமன்ற தேர்தல்களிலும், தமிழகத்தில் நடந்த அணைத்து சட்டமன்ற தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வரும் 1௦6 வயது மூதாட்டி சமுத்திரத்தம்மாள் நேற்று நடந்த 15 வது சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முத்துப்பேட்டை அடுத்துள்ள எடையூர் சங்கேந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு தனது சகோதிரி தேனம்மாளுடன் வந்து வாக்களித்தார்.

நிருபர் முஹைதீன் பிச்சைimageimage

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author