சென்னை சூப்பர் கிங்க்ஸை வீழ்த்தியது தென்னரசு பள்ளத்தூர் அணி!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (21-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய தினம் நடைப்பெற்ற ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் விளையாடினர். பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல்கள் அடித்த நிலையில் சமநிலையில் ஆட்டம் முடிந்தது. இதனை அடுத்து 5 நிமிடங்கள் நேரம் அதிகரிக்கப்பட்டது. இதிலும் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றதால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளரை அறிவிக்க நடுவர்கள் முடிவெடுத்தனர்.

இதனை அடுத்து நடைப்பெற்ற டைபிரேக்கரில் தென்னரசு பள்ளத்தூர் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close