உள்ளூர்

அதிரை அருகே சாலை விபத்து! ஒருவருக்கு பலத்த காயம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரையை நோக்கி இரவு 1.20 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார் .அப்போது புதுக்கோட்டை உள்ளூர் அருகே வந்த போது எதிரே வந்த ஆட்டோ இவர் மீது பயங்கரமாக மோதியது .இதில் ஜான்சன் அவர்களுக்கு முகத்தில் மிக பெரிய காயமும்,கை மட்டும் கால் முறிவு ஏற்ப்பட்டது .

உடனடியாக தகவல் அறிந்த ஆரிப் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் .தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .image image image

Show More

Related Articles

Close