அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரில் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது கண்டனூர் (PHOTO GALLERY)

அதிரையர்களுக்கு கோடை விடுமுறையில் மாலை நேர பொழுதுபோக்காக அமைவது அதிரை AFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர்போட்டி. கடந்த 13 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் இத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு முதல் பரிசாக 25,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 20,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் துவங்கின.

இதில் மாநில அளவில் தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடினர். இத்தொடாரின் இறுதி போட்டி இன்று கலைவானர்7ஸ் கண்டனூர் அணியினருக்கும் தெண்ணரசு பள்ளத்தூர் அணிகளுக்கும் இடையில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டில் இரண்டு பகுதி நேர இடைவெளிக்கு பிறகும் எந்த அணியும் கோல் போடவில்லை. எனவே டைப்ரேக்கர் முறையில் வெற்றியாளரை தீர்மாணிக்க முடிவு செய்யபட்டது. இதில் கண்டனூர் அணி வீரர்கள் வெற்றி பெற்றனர்.

முன்னதாக இப்போட்டியை கோட்டை அமீர் M.B.அபூபக்கர், காதிர் முஹைதீன் பள்ளி தலைமையாசிரியர் மஹ்பூப் அலி, காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ராமசந்திரன், TIYA தலைவர் மாலிக் மற்றும் AFFA நிர்வாகிகள் மைதானத்தின் மைய பகுதிக்கு சென்று வீரர்களை வாழ்த்தி துவங்கி வைத்தனர்.

இறுதியாக பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் பரிசை வென்ற கண்டனூர் அணியினருக்கு சுழற்கோப்பையும் 25,000 பணமும் பரசாக வழங்கப்பட்டது. ரண்ணர்ஸ் கோப்பை மற்றும் 20,000 பணம் ஆகியவற்றை பள்ளத்தூர் அணியினருக்கு வழங்கப்பட்டது. சிறந்த அணிக்கான விருதை பள்ளத்தூர் அணியினரும், சிறந்த சென்டர் ஃபார்வேட் விருதை அதிரை SSMG அணியை சேர்ந்த சைஃபுத்தீன் அவர்களுக்கும், சிறந்த டிஃபெண்டர் விருதை அதிரை AFFA அணியை சேர்ந்த சலாஹுத்தீன் அவர்களும், சிறந்த கோல்கீப்பருக்கான விருதை தென்னரசு அணி கோல்கீப்பரும் பெற்றனர்.

image image image image image image image image image image

Close