திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஜெயலலிதா

Stalin-jayalalitha-பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு அதிகாரிகளே காரணம் என முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தது தனக்கு தெரியாது என்றும், அவ்வாறு தெரிந்திருந்தால் விதிகளை தளர்த்தி ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார். 

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தமிழகத்தை மேம்படுத்த ஸ்டாலினுடனும், அவரது கட்சியுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.


 

Close